பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதேவேளை, ஹாலி-எல, 7ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அங்கு மண்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.