தமிழகம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான பொலிஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் நேற்று புதன் கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத சிலர் சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.எனினும் பொலிஸாரினை கண்டதும் அவர்கள் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 1.25 டன் எடையுள்ள பீடி இலை பொதிகள் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு பின்னர் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.