உலக உணவுத் திட்டம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறியஇ குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2793 பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உலருணவு பொதிகள் நேற்று செவ்வாய் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான ரூபா. 15,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.



