அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலா ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றுலா பயணியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதான அமெரிக்கரான குறித்த சுற்றுலாப் பயணி, ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறைக்குள் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.