நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 320 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.