-யாழ் நிருபர்-
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரை கண்டதும் குறித்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கும் போது சுன்னாக பொலிஸார் சந்தேகபரை மடக்கி பிடித்தனர். இதன்போது அவரது உடமையில் இருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.