கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னோருவ இராணுவ முகாமில் கடமையாற்றும் (வயது – 39) நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 470 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.