மஹியங்கனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திரு.பிரபோப விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனையில் வசிக்கும் 32 வயதுடையவரிடமிருந்து 4500 மில்லிகிராம் ஹெரோயினும் 25 வயதுடைய நபரிடமிருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.