ஹரக் கட்டா எனும் நடுன் சிந்தக என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து கடந்த 10 ஆம் திகதி சந்தேகநபர் கான்ஸ்டபிளிடமிருந்து கைவிலங்குகளை அவிழ்த்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.