ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிக்க வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் இன்று செவ்வாய்க்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போதுஇ அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.