-பதுளை நிருபர்-
பதுளை மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் வாகன பரிசோதகர் தலைமையில் நேற்றைய தினம் ஹப்புத்தளை நகரில் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது 49 வாகனங்களை செலுத்துவதட்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அத்தோடு கனரக வாகனம் செலுத்தி வந்த சாரதி ஒருவரது சாரதி அனுமதிப்பத்திரம் போலியானதென கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பதுளை மாவட்ட வாகன பரிசோதகர் தெரிவித்தார்.
இதன் போது கனரக வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியதாகவும் சாரதியும் கைது செய்ப்பட்டதாக அப்புத்தளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி தெரிவித்தார்


