அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.