ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த மனு மீதான விசாரணை சோபித்த ராஜகருணா மற்றும் டீ.என் சமரக்கோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் நீதிமன்றில் இன்று முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் மேலும் பல சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்தநிலையில், குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனையை முன்னெடுப்பதற்காக வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.