நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து பணம் பெறுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் அவர் செயற்படுவதாக அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே இவை தொடர்பில், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.