ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு, சோபித்த ராஜகருணா மற்றும் டீ.என் சமரக்கோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனு மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இன்று வரை அதன் விசாரணைகள் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.