வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ்பபாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராசா விஜயராணி (வயது – 63) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம் 28 ஆம் திகதி திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூளையில் இரத்தக் கட்டி உறைந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.