கடுகன்னாவ வைத்தியசாலையின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை மண்மேடு வெட்டச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கண்டி – அல்பிட்டிகந்த – பரணபத்து பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.