-யாழ் நிருபர்-
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விரத சிறப்புபூஜை வழிபாடுகள் இடம்பெற்றன .
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இடம்பெற்றதுடன் காலை 06.00 மணிக்கு ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்இ சீதேவிஇ பூமாதேவிஇ ஆகிய தெய்வங்களாக்கு விஷேட ஆராதணைகள் இடம் பெற்றன.
இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம செ.ரமணீதரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்ததுடன் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்த அடியார்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.



