-யாழ் நிருபர்-
இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன் அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவையானத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமான விழிப்புணர்வு பலகை மண்கும்பான் பிள்ளையாளர் கோவிலுக்கு முன்புறமாக நாட்டப்பட்டது.
இவ் Indian Courserபறவையினமானது,
மிகவும் அரிதான அழிந்துவிடும் ஆபத்தின் விளிம்பில் காணப்படும் பறவை.
இதேநேரம் இலங்கையில் வடபகுதியான நெடுந்தீவில் மட்டுமே Indian Courser எனும் பறவை காணப்படுகின்றது.
அழிவின் விளிம்பில் இருக்கும் குறித்த பறவையை பாதுகாப்பதற்காக சி.சி.எச் நிறுவனம் இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் Dialog நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
அத்துடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நெடுந்தீவு பிரதேச செயலகம் வட மாகாண சுற்றுலா பணியகம் நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஆகியனவும் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையிலேயே கடந்த சனிக்கிழமை குறித்த பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் கால் நடை மேச்சற்றறைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அரச நிலத்தில் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலர், பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர், பிரதேச சபையின் அதிகாரிகள், நிறுவன உத்தியோகத்தர்கள், இயற்கை ஊக்குவிப்பு கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
