-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கிண்ணியா இடிமன் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடிமன் பகுதியில் கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி ஒன்றில் வேட்பாளராக களமிறங்கிய பெண் ஒருவரின் வீட்டில் புதையல் தோண்டுவதற்கான பூசை நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் இன்றையதினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.