கண்டி மடுல்கலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 599051 என்ற இலக்கத்தை கொண்ட டொல்பின் ரக வான் காணாமல்போயுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளை ஆராய்ந்த போது குறித்த வாகனத்தை முகத்தை மூடிக் கொண்டு வந்த சிலர் கொள்ளையிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வான் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 076 7787955 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு வானின் உரிமையாளர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.