விடாது பெய்து வரும் கனமழையால் மட்டக்களப்பில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம், ஊரணி பிரதான பாதையானது முற்றிலும் நீரில் மூழ்கி காணப்படுவதனால், அதனூடாக போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.


