நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவம் நேற்று வியாழக்கிழமை மட்டும் 3,790 பேரை மீட்டு பாதுகாப்பான மையங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளனர். கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீதிகள் மூடப்பட்டுள்ளமை மீட்பு நடவடிக்கைகளுக்கு சவாலானதாக மாற்றியுள்ளன. ஆனால் தேவைப்படுபவர்களை சென்றடைய இராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர்.