வெலிகந்தை மொனரதென்ன பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனரதென்ன பிரதேசத்தை சேர்ந்த 03, 20, 25, 35 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தங்களது பயிர்களை காப்பதற்காக சென்றிருந்த நிலையில் மாதுரு ஓயா மற்றும் குடா ஓயா நீர்த்தேக்கங்கள் நிரம்பியதில் அப்பகுதியில் வெள்ளம் ஏற்றபட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களது பாதுகாப்பு நிமித்தம் மரங்களில் ஏறியுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.