மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான முதலைகள் காணிகளுக்கு வந்துள்ளதால் பலர் நிவாரணப் பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாத்தறை நகரின் வடிகால்கள், கால்வாய் அணைகள் மற்றும் வயல்வெளிகளில் கடந்த சில நாட்களாக பல முதலைகள் காணப்பட்டன.
மாத்தறை கோட்டையில் உள்ள நில்வலா ஆற்றின் முகப்பில் இருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட சில முதலை குட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் அனர்த்த பிரதேசங்களுக்கு செல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது உதவிகளை வழங்குவதற்காக பிரதேச செயலகங்கள் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு தமது உதவிகளை வழங்குவதை காணக்கூடியதாக இருந்தது.