திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவில் உள்ள மயிலப்பன் சேனை, சோலை வெட்டுவான், காரவெட்டுவான், கண்டல் காடு வெள்ள நீரினால் தரைவழி போக்குவரத்துகள் நேற்று ஞாயிற்று கிழமையுடன் நான்கு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்து விடப்பட்ட உப்பாறு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்களுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவு பொதிகள் நேற்று ஞாயிற்று கிழமை வழங்கப்பட்டன.
இதன் போது நான்கு கிராமங்களை சேர்ந்த 105 குடும்பங்களுக்கு 2400 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


