-சம்மாந்துறை நிருபர்-
காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன பாலத்திற்கும் இடையில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அது மட்டுமின்றி தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலை போன்று காட்சியளித்தது
இந்நிலையில் இளைஞர்கள் ஆறுகளாக மாறியுள்ள வயல் நிலங்களை குளிப்பதற்காக பயன்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பெருமளவிலான மக்கள் அக் காட்சியை பார்வையிட்டனர்.




