வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் புதன் கிழமை மிகவும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றது.
ஆலய புதிய தர்மகர்த்தா சபையின் மக்கள் தொடர்பாடல் முன்னாள் ஊவா மாகாண சபையின் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான ஆறுமுகம் சிவலிங்கத்தின் தலைமையில் ஆலய பொறுப்பாளர் சபை, வெளிமடை தமிழ் சங்கம், வெளிமடை நலன்புரி சங்கம், வெளிமடை அமரர் சேவை, வெளிமடை இந்து கலாச்சார மன்றம், வெளிமடை சரணகீர்த்தனம் ஐயப்பா குழு, வெளிமடை அறநெறி மன்றம் ஆகிய சங்கங்கள் இணைந்து முதல் முறையாக வெளிமடை சிறி ஞானசக்தி முருகன் ஆலயத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இப்பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் போட்டி, கோலப்போட்டி, நிறைகுடம் வைத்தல் போட்டி, மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இவ்விழாவுக்கு அகில இலங்கை சமாதான பேரவையின் தலைவர் கோவிந்தராஜன் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் பெருந்திரளான மக்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


