மாலைத்தீவு நோக்கி செல்லவிருந்த வெளிநாட்டு பிரஜையொருவரின் பயணப்பையில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாலைத்தீவை சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபரின் பயணப்பையை ஸ்கேன் சோதனையிட்ட போதே குறித்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.