வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று அதிகாலை 01.10 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அதன் பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சந்தேக நபரின் இரு பயணப் பொதிகளிலிருந்து 156 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எதிர்வரும் 10ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.