-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான யுணைதீன் ரபாய்தீன் (58 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏழுபுளிடியாளியில் வசித்து வரும் குறித்த நபரின் மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் மனைவி வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
தன்னுடைய மனைவி தன்னுடன வாழ விரும்பவில்லை எனவும் அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் பலரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை ஆறு முப்பது மணிக்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைட் பொருளைக் கட்டிக் கொண்டு அதனை வெடிக்க செய்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
