-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு இறப்பு தேசிய அடையாள அட்டை பெறுதல் உட்பட சமூக சேவைகள் திணைக்களம் ஊடான சேவைகள் என பலதரப்பட்ட சேவைகள் மக்களின் நலன் கருதி இடம் பெற்றது.
இதன்போது 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்ததடன் இதில் வெருகல் பிரதேச உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அஸ்வெசும முகாமையாளர்கள் கிளைத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
