வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்தியர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மீகம தர்கா நகர்ப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோதே வெந்நீர் கொதிகலனுக்குள் வீழ்ந்து, அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.