நாவல பகுதியில் வீடொன்றில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், நாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.