இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 763,288 ரூபாவாக காணப்படுகின்றது.
இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,930 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 215,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,690 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,570 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.