வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி – பாலக்குடா , கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா (வயது – 37) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலவில பகுதியில் இருந்து நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு பலத்த காயத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரதேச பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பன இடம்பெற்றன.
இந்த விபத்து தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.