கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற வீதியோர நிகழ்ச்சியின் போது கார் மோதியதில் பலர் உயிரிழந்தனர்.
கனடாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் ஏற்பாடு செய்திருந்த பண்பாட்டு நிகழ்ச்சியொன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சி வீதியோரத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வேகமாக வந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
கார் மோதியதில் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காரின் ஓட்டுநரை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது ஒரு எதிர்பாராத விபத்து என தெரிவித்ததோடு, இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை எனவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.