-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யுக்திய திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை அடுத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் விரைந்து வந்து சாரதியை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்துத பௌத்த பிக்கு இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.