வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.