பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், நாடளாவிய ரீதியில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் சோதனையிட பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
வாகனங்கள் மூலம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் இதனால் வீதித் தடைகளில் சோதனையிட பொலிஸ் வாகன உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்கள் பிரிவினர் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.