இரத்தினபுரியில் உள்ள தேயிலை தோட்ட லயன் அறையொன்றில் இருந்து தாய் மற்றும் அவரது ஆண் குழந்தையின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 21 வயதான ஒரு பிள்ளையின் தாயும் மற்றும் 02 வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் கணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளதுடன் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.