நுவரெலியாவில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மழை காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான் எளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதன் போது வீட்டுக்குள் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


