அச்சுவேலி பிரதேசத்தில் வீட்டின் முன்னால், வீதியோரம் கிடந்த புற்களை பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது கெப் ரக வாகனமொன்று நேற்று சனிக்கிழமை மோதியதில் அவர் குறித்த இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வல்லை பகுதியை சேர்ந்த சீனியர் சந்திரகாந்தன் (வயது – 56 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கோழிக்குஞ்சுகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனம் குறித்த நபர் மீது மோதியதையடுத்து அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளது.
இதன் போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தராக கடமையாற்றும் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.