யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டு மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.