-யாழ் நிருபர்-
கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்து அழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.