-பதுளை நிருபர்-
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை அமுனுவெல் பிடிய வட்டலுவ கொட பதன பகுதியில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தமையினால் வீட்டின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் 5 பிள்ளைகளும் தாய் மாத்திரமே இருந்துள்ளதாகவும் எவருக்கும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
