வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் அல் அக்ஸா வீதியிலுள்ள வீட்டில் வீட்டின் கதவை உடைத்து மோட்டார் சைக்கிள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
BFL 0853 எனும் இலக்கமுடைய பல்சர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
திருட்டு சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.