-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய், சங்குவேலி தெற்கு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் வீடு ஒன்றின் மீது வன்முறைக்குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திவிட்டு, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரி.வி.எஸ் அப்பாச்சி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

