இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உணவு விஷமானதன் காரணமாக 30 மாணவர்கள் சுகவீனமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பலம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.