Last updated on June 9th, 2023 at 05:58 pm

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

நிலைபேறான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அகம் மனிதாபிமான வளநிலையம்  ஊடாக விவசாய உபகரணங்கள் கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பொருட்களானது இன்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச சபை வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் பங்கேற்பு ஜனநாயக ரீதியான திட்டத்தின் ஒரு பகுதியாக கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்று வருகின்றது

குறித்த கலந்துரையாடலானது சிவில் சமூக அமைப்புக்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில் இடம் பெற்று வரும் 45 நாட்களுக்கு ஒரு முறை இடம் பெறும் கலந்துரையாடலின் பின் மக்களின் தேவைகள் முன்னுரிமை அடிப்படையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக இக் குறித்த விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமையில் இருந்து இத் திட்டம் ஊடாக முன்னேற இவ் உபகரணங்கள் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shanakiya Rasaputhiran

விவசாய உபகரணங்களான நீர்ப் பம்பி, நீர் குழாய் என சுமார் தலை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இரு குடும்பங்களுக்கு தங்களது விவசாய தோட்டச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டன. 

இதில் அகம் மனிதாபிமான வள நிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன், கிண்ணியா பிரதேச சபை உள்ளூராட்சி உதவியாளர் இ.கலைமதி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.நஜாத், அகம் மனிதாபிமான வள நிலைய திட்ட ஆலோசகரும் வளவாளருமான என்.மிதுனாளன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என்.மிரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad